Skip to main content

கார் பந்தய சாம்பியன் ஹாமில்டனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Dec 02, 2020 294 views Posted By : YarlSri TV
Image

கார் பந்தய சாம்பியன் ஹாமில்டனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

பார்முலா1’ கார் பந்தயத்தில் 7 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தவரான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பக்ரைன் கிராண்ட்பிரி பந்தயத்தில் முதலிடம் பிடித்தார். நேற்று முன்தினம் காலை எழுந்ததும் ஹாமில்டன் தனக்கு சோர்வாக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அவருக்கு 2 முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.



இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லேசான வைரஸ் தொற்று அறிகுறியுடன் இருக்கும் அவரது உடல் நிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் (பாதிப்பில்லை) என்று முடிவு வந்தால் தான் மீண்டும் போட்டியில் பங்கேற்க முடியும்.



எனவே அவர் இந்த வாரம் இறுதியில் பக்ரைனில் நடைபெறும் சகிர் கிராண்ட்பிரி பந்தயத்தில் விளையாட முடியாது. இந்த சீசனின் கடைசி சுற்று பந்தயமான அபுதாபி கிராண்ட்பிரி போட்டி வருகிற 13-ந் தேதி நடக்கிறது. அதிலும் 35 வயதான ஹாமில்டன் கலந்து கொள்வது கடினம் தான் என்று தெரிகிறது. ஹாமில்டனுக்கு பதிலாக களம் காணும் மாற்று வீரர் யார்? என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை