Skip to main content

கிறிஸ்மஸ் பண்டிகைக்குள் கொவிட்-19 தடுப்பூசி: ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை!

Nov 27, 2020 246 views Posted By : YarlSri TV
Image

கிறிஸ்மஸ் பண்டிகைக்குள் கொவிட்-19 தடுப்பூசி: ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை! 

கிறிஸ்மஸ் பண்டிகைக்குள் கொவிட்-19 தடுப்பூசி: ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை!



எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்குள் உறுப்பு நாடுகளில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) செலுத்தத் தொடங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.



இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோண்டெர் லெயென் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசியைப் பெறுவதில் நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படுகிறது. கிறிஸ்மஸ் பண்டிகைக்குள் ஐரோப்பாவில் அந்தத் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.



எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கப்படக்கூடும்’ என கூறினார்.



கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.



இதில், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் அஸ்ட்ராஜெனிக்கா மருந்து நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



குறித்த தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் முதல் தவணையாகப் போட்டப்பட்ட தடுப்பூசியின் முடிவின்படி 70.4 வீதம் பயனளித்துள்ளது.



அத்துடன், இரண்டாம் தவணையாகச் செலுத்திய தடுப்பூசியின்படி 90 வீதம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதேபோல, அமெரிக்காவில் தயாராகும் பைசர் மற்றும் பயான்டெக் நிறுவன தடுப்பூசி மற்றும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசி ஆகியன நல்ல பலனை தந்துள்ளன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை