Skip to main content

தமிழர்கள் ஒத்துழைத்தாலே தீர்வு கிடைக்கும் இல்லையென்றால் ஒன்றும் கிடைக்காது!

Jun 10, 2020 346 views Posted By : YarlSri TV
Image

தமிழர்கள் ஒத்துழைத்தாலே தீர்வு கிடைக்கும் இல்லையென்றால் ஒன்றும் கிடைக்காது! 

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் குறித்து புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பிப்போம். அதன் பிரகாரம் அரசியல் தீர்வு தொடர்பான திட்ட வரைபு தயாரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே இதைனை தெரிவித்துள்ளார்.



அந்த பேட்டியில்,



நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் அந்த தீர்வுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்போம். இதுவே, இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக எனதும், அரசாங்கத்தினதும் நிலைப்பாடாகும்.



தமிழ்மக்களின் பிரச்சனைகளிற்கு நாம்தான் தீர்வை வழங்க வேண்டும். வெளிநாடுகள் வந்து தீர்வை தருமென யாருமே நம்பக்கூடாது. ஏனெனில் இது எமது உள்நாட்டு பிரச்சனை. நாம்தான் பேசித் தீர்க்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்களும் எம்முடன் எவ்வளவு நெருக்கமாக இணைந்து செயற்படுகிறார்களோ அவ்வளவு விரைவாக நாம் தீர்வை காணலாம்.



ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் எதையும் சாதிக்க முடியும். முரண்பட்டால் எந்த பலனுமில்லை என்று தெரிவித்துள்ளார்



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை