Skip to main content

வேனுடன் துவிச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயம்!

Nov 23, 2020 227 views Posted By : YarlSri TV
Image

வேனுடன் துவிச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயம்! 

வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன் வேனுடன் துவிச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இன்று (23) காலை இடம்பெற்ற இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,



வவுனியா குருமன்காட்டில் இருந்து வவுனியா நகரத்தை நோக்கி வந்த வேன் துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.



இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை