Skip to main content

கூட்டமைப்பினரிடமிருந்து நல்லூர் பிரதேச சபை நிர்வாகத்தினை கைப்பற்றுவதற்காகவே 2020 பாதீடு திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளது - தா.தியாக மூர்த்தி

Nov 19, 2020 252 views Posted By : YarlSri TV
Image

கூட்டமைப்பினரிடமிருந்து நல்லூர் பிரதேச சபை நிர்வாகத்தினை கைப்பற்றுவதற்காகவே 2020 பாதீடு திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளது - தா.தியாக மூர்த்தி 

கூட்டமைப்பினரிடமிருந்து நல்லூர் பிரதேச சபை நிர்வாகத்தினை கைப்பற்றுவதற்காகவே 2020பாதீடுதிட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தா.தியாக மூர்த்தி தெரிவித்தார்



தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்  தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்



அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனே இன்றைய தினம் வரவுசெலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் போது ஏற்கனவே அனைத்து உறுப்பினர்களிடமும் அவர்களுடைய வட்டார வேலைத்திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளை கேட்டிருந்தோம் எனினும் அவர்கள் அந்த கோரிக்கைகளைஒப்படைக்கவில்லை 



தற்போது அனைவரும் கட்சி ரீதியாக செயற்படுகிறார்கள் சபை ஆரம்பித்த காலத்திலிருந்து சபையில் கட்சி பேதம் பார்க்காது நான் சபையை நடாத்தி வந்திருக்கின்றேன்



இன்று  திட்டமிட்ட வகையில் இன்றைய தினம் பாதீட்டினை தோற்கடித்திருக்கிறார்கள் அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடமிருந்து  நல்லூர் பிரதேச சபை நிர்வாகத்தினை பறித்தெடுக்கும் நோக்கத்திலேயே 2021  வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது 



இது திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது  ஏனைய சபைகளில்  எதிராக வாக்களித்த வர்கள் ஆதரவு வழங்கி யிருக்கின்றார்கள் இதனை வைத்துப் பார்க்கும் போது விளங்குகின்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லூர் பிரதேசசபை நிர்வாகத்தில் இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை 



எனினும் வழமையாக எமக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய தேசிய கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள்இம்முறை  ஆதரவளிக்காது எதிர்த்து வாக்களித்துள்ளார்கள்.



 எனினும் எதிர்வரும் வாரமளவில் வரவு செலவுத்திட்டம் மிகவும் சபையில் சமர்ப்பிக்கப்படும் எனவும்தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை