Skip to main content

பள்ளிகள் திறக்கப்பட்ட 17 நாட்களில் 142 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் பெற்றோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!

Nov 19, 2020 258 views Posted By : YarlSri TV
Image

பள்ளிகள் திறக்கப்பட்ட 17 நாட்களில் 142 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் பெற்றோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது! 

கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகளை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் உள்ள பள்ளிகளை



திறந்தன. 



அரியானா மாநிலத்திலும் கடந்த 2-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டுமே நடந்த அனுமதிக்கப்பட்டுள்ளது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையிலும் மாணவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில், அம்மாநிலத்தின் ரிவாரி, ஜிந் மற்றும் ஹஜார் மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் அதில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 



அந்த பரிசோதனையில் மூன்று மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 142 மாணவர்களுக்கு (ஜிந் 30 மாணவர்கள், ரிவாரி 34 மாணவர்கள், ஹஜார் 78 மாணவர்கள்) கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.



குறிப்பாக கடந்த 2 நாட்களில் மட்டும் 25 மாணவர்களுக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. மாணவர்கள் மட்டுமல்லாமல் ஜிந் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.



இதையடுத்து, வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் பயின்றுவந்த பள்ளிகள் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பள்ளிகளில் மாணவர்கள் சமூக இடைவெளி உள்பட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாததே வைரஸ் பரவ காரணம் என தெரியவந்துள்ளது.  



அரியானாவில் பள்ளிகள் திறக்கப்பட்ட 17 நாட்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெற்றோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை