Skip to main content

இத்தாலியில் ஒரே நாளில் மேலும் 27,354 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது!

Nov 17, 2020 316 views Posted By : YarlSri TV
Image

இத்தாலியில் ஒரே நாளில் மேலும் 27,354 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது! 

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது.



உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 



தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 



தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 5 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலி 9-வது இடத்தில் உள்ளது



இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஒரே நாளில் 27,354 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியது.



அந்நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 504 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 773 ஆக அதிகரித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை