Skip to main content

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து தீவிரமாக பரவி வருகிறது1

Aug 21, 2020 283 views Posted By : YarlSri TV
Image

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து தீவிரமாக பரவி வருகிறது1 

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து தீவிரமாக பரவி அந்த நாட்டு மக்களை கலக்கத்துக்கு ஆளாக்கி வருகிறது.



அங்கு நேற்று காலை வரையிலான ஒரு நாளில் 49 ஆயிரத்து 298 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 60 ஆயிரத்து 413 ஆக உயர்ந்து உள்ளது.



ஒரே நாளில் 1,212 பேர் பலியாகியும் இருக்கிறார்கள். இதனால் அங்கு கொரோனாவுக்கு இரையானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 189 ஆக அதிகரித்துள்ளது.



சா பாவ்லோ நகரம், 7 லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக விளங்குகிறது. அங்கு 27 ஆயிரத்து 591 பேர் இறந்தும் உள்ளனர்.



அதற்கு அடுத்து ரியோ டி ஜெனீரோ நகரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.



அமெரிக்காவுக்கு அடுத்து மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் தொடர்வது அந்த நாட்டு மக்களுக்கு பெருத்த சோகமாக அமைந்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை