Skip to main content

தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை

Nov 08, 2020 243 views Posted By : YarlSri TV
Image

தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை 

தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.





இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் படகுகள், வலைகளை சேதப்படுத்துவதும், மீன்களை அள்ளிச் செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க நுழைந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பதும், தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் நடைபெற்று வருகிறது.



பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் அருகேயுள்ள பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி இருப்பதால் பல விசைப் படகுகள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.



படகுகளை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, தமிழக மீனவர்கள் படகுகளால் இலங்கை கடற்கரை மாசடைவதாகவும், இலங்கை மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில், 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்திருந்த 121 படகுகளில் 94 படகுகளை அழிப்பதற்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் மற்றும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





இதில் 88 படகுகள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமானது. இலங்கை நீதிமன்றத்தில் இந்த உத்தரவு தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை