Skip to main content

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி தீவிரம்!

Nov 10, 2020 284 views Posted By : YarlSri TV
Image

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி தீவிரம்! 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரம் எடுத்துள்ளன.



மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன் 3 வது அணி அமைக்க முயற்சிகள் எடுப்பதால் கூட்டணிகளில் குழப்பம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.



பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்கு வயது ஒன்று. தவழும் குழந்தையாக இருந்தபோதே நாங்கள் தமிழ்நாட்டில் 4 சதவீத வாக்குகள் பெற்றொம். இப்போது கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்திவிட்டோம். அதனால் தான் கமல் நாங்கள் தான் 3 வது பெரிய கட்சி என்று நம்பிக்கையுடன் கூறினார். கூட்டணி விசயத்தில் கமல் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் எங்களுக்கு சம்மதம் தான். முக்கிய திராவிட கட்சிகள் இரண்டையும் பலவீனப்படுத்தினாலே தேர்தலுக்கு முன்பு எங்களுக்கு வெற்றி தான். அதன் பின்னர் பலவீனமான கூட்டணி அமைந்தால் எங்கள் வெற்றி இன்னும் சுலபமாகி விடும். அதற்கான பணிகள் தான் இப்போது நடக்கிறது.

 



தமிழகத்தில் இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியை பிடிக்கின்றன. எனவே இந்த 2 கட்சிகளுக்குள்ளும் மறைமுக கூட்டணி ஏற்பட்டு விட்டது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் லஞ்சமும் ஊழலும் தான் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.



கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியலுக்குள் நுழைய காரணமே இந்த மக்கள் அதிருப்தி தான். மக்களின் தேவையை பூர்த்தி செய்துவிட்டோம். இனி மக்கள் தங்களுக்கு மாற்று வேண்டுமா வேண்டாமா என்பதை தான் முடிவு செய்யவேண்டும். அதாவது இந்த தேர்தலே கமல்ஹாசன் என்ற நேர்மையான, வலிமையான தலைமை வேண்டுமா? வேண்டாமா? என்றுதான் அமையும்.



நல்லவர்கள் எங்களுடன் இணைவார்கள் என்ற அறிவிப்பு 2 கூட்டணிகளிலும் அங்கீகாரத்துக்கு போராடும் கட்சிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. கூட்டணி விசயத்தில் நாம் எங்கும் விருந்தோம்பலுக்கு செல்ல வேண்டியது இல்லை. பதிலாக நம் விருந்துக்கு தான் எல்லோரையும் அழைக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை