Skip to main content

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கான கலந்துரையாடல்!

Nov 09, 2020 240 views Posted By : YarlSri TV
Image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கான கலந்துரையாடல்! 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கான கலந்துரையாடல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கௌரவ இராஜாங்க   அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன தலைமையில்) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.



பிரதேச செயலக ரீதியாக புலம்பெயர்  ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் 2019 ஆம்  ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தொடர்பான விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்த புலம்பெயர் தொழிலாளர்களிற்கு வாழ்வாதார உதவிகள் தேவைப்படுவதாகவும் மாவட்ட செயலக இணைப்பாளரால் குறிப்பிடப்பட்டது.



இதனைத் தொடர்ந்து கௌரவ  அமைச்சின் செயலாளரால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  எதிர்நோக்கும் சவால்கள் வினாவியதோடு  நாட்டில் மொத்த  உள்நாட்டு  உற்பத்தியில் கூடுதலான பங்களிப்பை புலம்பெயர் தொழிலாளர்கள் பெற்றுத் தருவதனால் புலம்பெயர் தொழிலாளர்களை மொழி ரீதியாக பலப்படுத்த வேண்டும்  எனவும் தெரிவித்துள்ளார்.



மேலும் வெளிநாடுகளிற்கு செல்லும் தொழிலாளர்கள் "ஸ்ரமிக சுரெகும"  எனும் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு  உத்தியோகத்தர்கள் மக்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளுதல் வேண்டும். அத்தோடு Traning Centres  மற்றும்  ஆளனிகளை பலப்படுத்துவதன் மூலம் திறன் மிக்க  தொழிலாளர்களை வெளிநாட்டிற்கு  அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை விரைவில்  ஏற்படுத்த  உள்ளதாகவும்  கௌரவ  அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.



யாழ் மாவட்டத்தில் முகவர் நிலையத்தை இயங்க செய்வதற்குரிய  இடவசதிகளை விரைவில் ஏற்படுத்த  உள்ளதாகவும் தன்னால் முடியுமானவரை வேலையில்லாப் பிரச்சினைக்குரிய தீர்வுகளை விரைவில் வழங்குவதாகவும் கொரிய, ஜப்பான் மொழிப் பயிற்சி ஜனவரியில்  இருந்து ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாகவும்  வெளிநாட்டு வேலைவாய்ப்பின் கௌரவ  இராஜாங்க  அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.



இக் கலந்துரையாடலில் கௌரவ இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன , அமைச்சின் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக செயலாளர் ஜமுன பெரேரோ, மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்  (காணி) முரளிதரன், உதவி மாவட்ட செயலாளர், அமைச்சின் அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை