Skip to main content

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது!

Nov 09, 2020 236 views Posted By : YarlSri TV
Image

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது! 

கல்லூரிகள் திறக்கப்படும்போது விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவரை மட்டுமே தங்க வைக்க வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.



இந்தியாவில் கல்லூரிகள் திறக்கப்படும் போது பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.



கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க பட வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.



கொரோனா காரணமாக இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 7 மாத காலமாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. குறிப்பாக இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களின் கருத்தை அரசு கேட்டு வருகிறது. அதே சமயம் கல்லூரிகள் திறக்கப்படும் பட்சத்தில், வெளியூரை சேர்ந்த மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒரு அறையில் பல மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது கவனிக்கத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை