Skip to main content

97 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மக்களவையில் மத்திய மந்திரி தகவல்

Sep 18, 2020 263 views Posted By : YarlSri TV
Image

97 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மக்களவையில் மத்திய மந்திரி தகவல் 

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ந்தேதியில் இருந்து முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ரெயில், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டது. இருப்பினும் அண்டை மாநிலங்களில் பிழைப்புக்காக தஞ்சம் அடைந்துள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக ஷராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் பலர் பயணம் செய்து சொந்த மாநிலத்தை வந்தடைந்தனர்.



இந்தநிலையில் ரெயில் பயணத்தில் பயணிகள் யாரும் இறந்தார்களா? என்ற கேள்விக்கு, பாராளுமன்ற மக்களவையில் மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ்கோயல் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் அவர், ‘மாநில காவல்துறை தரவுகளின்படி, கடந்த 9.9.2020 வரை சிறப்பு ரெயில்களில் பயணம் செய்த 97 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தந்த மாநில போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலர், மாரடைப்பு, மூளை ரத்தக்கசிவு, நாள்பட்ட நோய்களால் இறந்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.



கடந்த சில தினங்களுக்குமுன்பு, வேலை இழந்த மற்றும் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய எந்த விவரமும் எங்களிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை