திருமங்கலம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகா மாஸ்டர் கைது!
Nov 02, 2020 303 views Posted By : YarlSri TV
திருமங்கலம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகா மாஸ்டர் கைது!
திருமங்கலம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகா மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
மதுரை, திருமங்கலம் சாலையில் இருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன மடத்தின் ஒரு பகுதியை குருநாதன்(64) என்பவர் வாடகைக்கு எடுத்து, யோகா பயிற்சி மையம் நடத்தி வருகிறார். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் பல மாணவ மாணவிகள் யோகா கற்றுக் கொள்ள இவரிடம் சேர்ந்துள்ளனர். அந்த வகையில் திருமங்கலத்தை சேர்ந்த 13 வயது சிறுமியும் இவரிடம் 2 வாரங்களாக யோகா கற்றுக் கொண்டு வந்திருக்கிறார்.
நேற்று குருநாதன் சிறுமியை ஒரு அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை அந்த சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் குருநாதன் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், குருநாதனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago