Skip to main content

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது!

Nov 15, 2020 316 views Posted By : YarlSri TV
Image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது! 

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகள் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே தமிழகத்தில் பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 6 ஆம் தேதி திருத்தணியில் தொடங்க இருந்த வேல் யாத்திரை வரும் டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் முடிவடைவதாக இருந்தது.



ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் உயர் நீதிமன்றத்தில் பாஜக வேல் யாத்திரைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது. இருப்பினும் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதால் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.



இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தருகிறார். வேல் யாத்திரை மீண்டும் 17 ஆம் தேதி முதல் தொடரும் என எல். முருகன் தெரிவித்து இருந்தார். அதேசமயம் பாஜகவின் முக்கிய தலைவர்கள் வேல் யாத்திரையில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.இதன் காரணமாக அமித்ஷா தமிழகம் வருவதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் அவர் வருகின்ற சட்டப்பேரவை தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை