Skip to main content

முன்பை விட சக்திவாய்ந்த கொரோனா: புதிய வைரஸால் பீதி!

Nov 07, 2020 256 views Posted By : YarlSri TV
Image

முன்பை விட சக்திவாய்ந்த கொரோனா: புதிய வைரஸால் பீதி! 

முன்பை விட சக்திவாய்ந்த கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது  

கடந்த சுமார் 11 மாதங்களாக நாம் கொரோனாவால் மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்து வருகிறோம். எல்லா முயற்சிகளையும் தாண்டி கொரோனா வேகமாக பரவி வருகிறது. எனவே, கொரோனாவை ஒழிக்க தடுப்பூசிமட் டுமே ஒரே வழி என்பது உறுதியாகிவிட்டது.





தற்போது பரவி வரும் கொரோனாவையே சமாளிக்க நாம் திணறி வரும் நிலையில், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் மிகவும் சக்திவாய்ந்த கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. அதாவது, டென்மார்க்கின் மிங்க் (கீரி வகை உயிரினம்) பண்ணைகளில் பல லட்சக்கணக்கான மிங்குகளுக்கு இந்த கொரோனா பரவியுள்ளது.






இப்புதிய கொரோனாவால் டென்மார்க்கில் 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த மாற்றமடைந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 1.7 கோடி மிங்குகளை கொலை செய்ய டென்மார்க் அரசு திட்டமிட்டுள்ளது. மிங்க் விலங்கின் தோல் பல்வேறு தேவைகளுக்கான பயன்படுத்தப்படுகிறது. உலகின் ஒட்டுமொத்த மிங்க் தோல் தேவையில் 40 விழுக்காட்டை டென்மார்க் விநியோக்கிக்கிறது.






இந்நிலையில், டென்மார்க் பிரதமர் மெட் பிரெடெரிக்சன், “மாற்றமடைந்த வைரஸ் மிங்க் விலங்குகளை தாக்கியுள்ளது. அவற்றில் இருந்து மனிதர்களுக்கும் வைரஸ் பரவியுள்ளது. எனவே, கனத்த இதயத்துடன் இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம்” என்று மிங்க் கொலை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.






டென்மார்க் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் மிங்க் விலங்குகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு ஆயிரக்கணக்கான மிங்குகள் கொல்லப்பட்டுள்ளன.





ஏற்கெனவே உலகம் முழுக்க பரவி வரும் கொரோனாவுக்கு ஏற்ப பல்வேறு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு சோதனை நிலைகளில் இருக்கின்றன. இந்நிலையில், புதிய வைரஸ் பரவினால் அதை தடுப்பூசியால் சமாளிக்க முடியுமா என கேள்வியெழுந்துள்ளது.










Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை