Skip to main content

சஹ்ரானின் வாகனத்தை பயன்படுத்தும் சரத் வீரசேகர

Sep 13, 2023 32 views Posted By : YarlSri TV
Image

சஹ்ரானின் வாகனத்தை பயன்படுத்தும் சரத் வீரசேகர 

பயங்கரவாதி  சஹ்ரான் ஹசிமின் வாகனத்தை தான் பயன்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.



 வாகனம் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வாகன பிரிவில் உள்ள வழக்குப் பொருளாகும் என தெரிவித்துள்ளார்.



சனல் 4 ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய, சஹ்ரான் ஹசிமின் வாகனத்தை சரத் வீரசேகர எப்படி பயன்படுத்த முடியும் என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



நான் அவ்வாறு ஒரு வாகனத்தையும் பயன்படுத்தவில்லை. வழக்குப் பொருளாக உள்ளதனை நான் எப்படி பயன்படுத்துவேன். வேண்டும் என்றால் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுப் பாருங்கள். 



சனல் 4 செய்தி  பொய்யானதென நிரூபித்தக் கொண்டிருக்கும் போது இவ்வாறான போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சேறு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதனை நான் முற்றிலுமான நிராகரிக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை