Skip to main content

நாளை யாழில் மாபெரும் யாகம் நடாத்தப்படவுள்ளது கொரோனா நோயிலிருந்து விடுபட இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்!

Nov 07, 2020 265 views Posted By : YarlSri TV
Image

நாளை யாழில் மாபெரும் யாகம் நடாத்தப்படவுள்ளது கொரோனா நோயிலிருந்து விடுபட இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்! 

கொரோனா  நோயிலிருந்து விடுபட இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளை யாழில் மாபெரும் யாகம் நடாத்தப்படவுள்ளது..



 



கொரோனா கொடிய தொற்று நோயிலிருந்து எமது நாடும்.நாட்டு மக்களும்.மீண்டு வரவேண்டும் என்பதற்காக. சகல இந்து ஆலயங்களிலும் ஹோமம்,விசேட வழிபாடுகளை  செய்யும் வண்ணம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கமைவாக.எதிர்வரும் 08.11.2020  ஞாயிறுக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட இந்து குருமார் ஒன்றியத்தினால்   மாலை 4.30 மணிக்கு வண்ணார்பண்ணை பெருமாள் ஆலயத்தில் சுதர்சன  ஹோமமும் விசேட வழிபாடுகளும் சுகாதார நடைமுறைக்கு அமைவாக நடைபெறவிருக்கின்றன. இந்தப் பிரார்த்தனையின் ஊடாக சகல மக்களும் நோயிலிருந்து விடுபட்டு தங்களுடைய வழமையான வாழ்க்கையை வாழ்வதற்கு இறைவனை வேண்டி குறித்த யாகம் நடத்தப்பட உள்ளது குறித்த யாகத்தில் தற்போது நாட்டில் உள்ள கொரோனா  தொற்று  அச்சத்தின் காரணமாக பொதுமக்கள் யாரும் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவேபொதுமக்கள் வீடுகளில் இருந்தவாறு கொரோனா தொற்றிலிருந்து விடுபட இறைவனைப் பிரார்த்திக்குமாறு இலங்கை அந்தணர் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளார்கள்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை