Skip to main content

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல்அளித்துள்ளார்!

Oct 30, 2020 245 views Posted By : YarlSri TV
Image

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல்அளித்துள்ளார்! 

மருத்துவ படிப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அதனால் அவர்களின் கனவை நினைவாக்கும் பொருட்டு தமிழக அரசு, 7.5% இட ஒதுக்கீடு மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு 45 நாட்களுக்கு மேல் ஆகியும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தார்.



இதனால் நடப்பாண்டு எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்த நிலையில், அவர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே, அரசு உள் ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.



சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்டு ஒன்றரை மாதம் ஆன இந்த சட்ட மசோதா குறித்து, சொலிசிட்டர் ஜெனரலின் கருத்தை கேட்டிறிந்து ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலமாக 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை