Skip to main content

மாவட்டத்தின் தற்போதய கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராயும் மாவட்ட கொரோனா செயலணி விஷேட கூட்டம்!

Oct 30, 2020 229 views Posted By : YarlSri TV
Image

மாவட்டத்தின் தற்போதய கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராயும் மாவட்ட கொரோனா செயலணி விஷேட கூட்டம்! 

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தற்போதய கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராயும் மாவட்ட கொரோனா செயலணி விஷேட கூட்டம் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.



குறித்த கூட்டத்தில், திருமணங்களை வீட்டில் நடாத்த வேண்டும் எனவும், 50 பேருக்கு மேற்படாதவாறு நபர்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளது.



மரணசடங்குகளில் 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படவேண்டும் எனவும், வெளிமாவட்டத்தில் இருந்து மக்கள் வருகை தருவது தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் மேலும் தீர்மாணம் எடுங்கட்டுள்ளது.



அத்தோடு தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள அதே வேளை திறந்த சந்தைக்கும் அனுமதி இல்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்து.



விளையாட்டு போட்டிகளை ஒத்திவைத்தல், மக்கள் கூட்டங்களை மற்றும் பொது நிகழ்வுகளை ஒத்திவைக்கவும் குறித்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



பேரூந்துகளில் இருக்கைகளில் மட்டும் இருந்து பயணிப்பதற்கு அனுமதி எனவும், உணவங்களில் இருந்து உண்ணுதற்கு தடை வீதிக்கப்பட்டுள்ளது.



அத்தோடு வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருவோர் கிராமசேவகர்கள் ஊடாக பதிவினை மேற்கொள் வேண்டும் எனவும், அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் திரட்டு செய்யப்படவேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



ஆலயங்களில் மதகுருமார்களுக்கு மட்டும் அனுமதித்துள்ள அதே வேளை அன்னதானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



அவசர நிலையினை கருதி ஒருங்கிணைத்த செயலகமாக மாவட்டசெயலகம், பிரதேச செயலகங்கள் 7 நாட்களும் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



யாழ் மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு அவசர தொலைபேசி உதவி இலக்கமாக 0212225000 அறிவிக்கப்பட்டுள்ளது.



இன்று இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுத் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவாட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், வடமாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர் வைத்தியர் ஏ.கேதீஸ்வரன், வடமாகாண உளநல சேவை பணிப்பாளர் ஏ.கேசவன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ உதவி பணிப்பாளர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பொலீஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், யாழ் மாநகர ஆணையாள், பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள், சுகாதார சேவை சம்மந்தம்பட்ட அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கூட்டம் நிறைவடைந்ததும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மாணங்களை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

24 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை