Skip to main content

மாணவர்களின் நலனை பாதிக்கும் உயர் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேவையில்லை!

Oct 16, 2020 264 views Posted By : YarlSri TV
Image

மாணவர்களின் நலனை பாதிக்கும் உயர் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேவையில்லை! 

மாணவர்களின் நலனை பாதிக்கும் உயர் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேவையில்லை என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தர்மபுரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும்



அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உயர் சிறப்பு தகுதி கொண்டுவந்தால், தமிழக மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு பாதிக்கும் என்றும் கூறிய அவர், நுழைவுத்தேர்வு முறை, கட்டண அதிகரிப்பு போன்றவற்றை தமிழக அரசு அனுமதிக்காது என்று தெரிவித்தார். மேலும், தமிழக மாணவர்கள் நலன் பாதிக்கும் உயர் சிறப்பு தகுதியை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறிய அமைச்சர் கே.பி.அன்பழகன், ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகம் உலகத்தரம் கொண்டதாக இயங்கி வருவதாகவும், 2035ஆம் ஆண்டில் மத்திய அரசு உயர் கல்வியில் எட்ட நினைக்கும் தரத்தை, தமிழகம் தற்போதே எட்டி விட்டதாகவும் அவர் கூறினார். அண்ணா பலகலைக்கழக தரத்தை மேலும் அதிகரிக்க தேவை ஏற்பட்டால் தமிழக அரசு அதற்கு நிதி வழங்கும் என்று கூறிய அமைச்சர்,



துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக கடிதம் எழுதியது, தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் தேவைக்கு ஏற்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை