Skip to main content

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!

Oct 12, 2020 239 views Posted By : YarlSri TV
Image

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்! 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் 3ம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதால், முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.



அதில் மழைக்காலத்தின் போது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, ஏரிகள் குளங்கள் உள்ளிட்டவற்றை தூர்வாருவது உள்ளிட்ட முக்கியமான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய முதல்வர், புயல் வீசினாலும் சமாளிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.



மேலும், மழைக்கால பாதிப்புகளை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் புயல் காலத்தில் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை