Skip to main content

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்!

Oct 06, 2020 256 views Posted By : YarlSri TV
Image

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்! 

கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 7-6 (11-9), 6-2 என்ற நேர்செட்டில் 20-ம் நிலை வீரரான பல்கேரியாவின் டிமிட்ரோவை வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் பிரெஞ்ச் ஓபனில் கால்இறுதிக்குள் நுழைந்த முதல் கிரீஸ் நாட்டவர் என்ற பெருமையை பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் சரிவில் இருந்து மீண்டு வந்து 6-7 (4-7), 7-5, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் புக்சோவிக்சை சாய்த்து முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 6-3, 6-3 என்ற நேர்செட்டில் ரஷியாவின் கச்சனோவை தோற்கடித்து 14-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.



முன்னதாக நடந்த ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான டொமி னிக் திம் (ஆஸ்திரியா) 6-4, 6-4, 5-7, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ‘வைல்டு கார்டு’ வாய்ப்பில் முன்னேறிய ஹூகோ காஸ்டனை (பிரான்ஸ்) போராடி வெளியேற்றி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.



பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக் கும் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 39-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஷூவாய் ஜாங்கை தோற்கடித்து 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 25 நிமிடம் தேவைப்பட்டது.



மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீராங்கனை லாரா சீஜ்மன்ட் 7-5, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் பாலா படோ சாவை விரட்டியடித்து கால்இறுதிக்குள் கால் பதித்தார்.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

10 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை