Skip to main content

காங்கிரஸின் கருப்பு அறிக்கை!

Feb 09, 2024 60 views Posted By : YarlSri TV
Image

காங்கிரஸின் கருப்பு அறிக்கை! 

நரேந்திர மோடி காலத்தின், “கறுப்பு அறிக்கை“யை காங்கிரஸ் வியாழக்கிழமை (பிப்.8,2024) வெளியிட்டது. 10 ஆண்டுகள் அநீதி என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



நரேந்திர மோடி காலத்தின், “கருப்பு அறிக்கை“யை காங்கிரஸ் வியாழக்கிழமை (பிப்.8,2024) வெளியிட்டது. 10 ஆண்டுகள் அநீதி என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



அதில் மோடி ஆட்சியில் பொருளாதாரம் சிதைந்துவிட்டது; வேலை இல்லாத் திண்டாட்டம் மோசமடைந்துள்ளது” எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.



மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான "கடுமையான அநீதிகள்" தூண்டப்படுகின்றன.



காங்கிரஸின் இந்த நடவடிக்கை குறித்து கேலி செய்யும் வகையில், தனது அரசாங்கத்திற்கு எதிராக "கருப்பு காகிதத்தை" வெளியிட்டதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு நன்றி தெரிவித்த மோடி, நல்ல வேலைகளுக்கு மத்தியில் அதை "காலா தீக்கா" (கண் திருஷ்டி விலகல்) எனக் குறிப்பிட்டார்.



காங்கிரஸ் வெளியிட்டுள்ள கறப்பு அறிக்கை கையேட்டின் கருப்பொருள்கள் ராகுல் காந்தியின் தற்போதைய பாரத் ஜோடோ நீதி யாத்திரையைப் போலவே உள்ளன.



வடக்கு-தெற்கு, ஓபிசி, எஸ்சி, எஸ்டி என காங்கிரஸ் சமூகங்களை பிரிப்பதாக நரேந்திர மோடி குற்றஞ்சாட்டிய நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.



குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து கார்கே கூறுகையில், “நான் அவரை (திரௌபதி) விமர்சிக்கவில்லை. அவரை மதிக்கிறேன்.



ஆனால் நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே, கே.ஆர். நாராயணனை குடியரசுத் தலைவர் ஆக்கினோம். அவர் படித்தவர், பத்திரிகையாாளர், தூதுவர், துணை தலைவர் என பன்முகம் கொண்டவர்” என்றார்.



தொடர்ந்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக, ஆயிரக்கணக்கான கோடி கடன்களை வழங்கி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்றும் கார்கே குற்றம் சாட்டினார்.



மேலும், “அவர்கள் அழுத்தம் மற்றும் மறைமுக துன்புறுத்தல் மூலம் நிதி திரட்டுகிறார்கள். இந்த பணம் ஜனநாயகத்தை அழிக்க பயன்படுத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக 411 எம்.எல்.ஏ.க்களை அணி மாறச் செய்து ஆட்சியைக் கவிழ்த்துள்ளது” என்றார்.



இதையடுத்து, எனது 53 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஒரு தேர்தலைத் தவிர எந்த ஒரு தேர்தலிலும் நான் தோற்றதில்லை. என்னை மறைமுகமாக துஷ்பிரயோகம் செய்வது, சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு செய்வது அவர்களின் பாணி. அவர் மீது எந்தக் களங்கமும் இல்லாத எஸ்சியை அவதூறு செய்ய நினைத்தால், பார்ப்போம். எங்களுக்கு அனுதாபம் தேவையில்லை, அவர்களின் குறைபாடுகளை மட்டுமே முன்னிலைப்படுத்த விரும்புகிறோம்.



தொடர்ந்து, நேரு மீதான மோடியின் விமர்சனங்களுக்கும் கார்கே பதிலளித்தார். இதையடுத்து நிதி பங்கீடு குறித்து பேசிய கார்கே, “குஜராத்துக்கு ரூ.48 ஆயிரம் நிதி கொடுக்கப்படுகிறது; ஆனால் அதற்கு ஈடாக 2.5 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.



இதை யாராவது சொன்னால் நாட்டை பிளவுப்படுத்துபவர், “தேசத் துரோகி” ஆகிவிடுகிறார். ஆனால் மோடிதான் நாட்டைப் பிளவுப்படுத்தி, வன்முறைகளை தூண்டிவிடுகிறார்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை