Skip to main content

அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பிரமாண்ட ஊர்வலம் வவுனியாவில்!

Oct 01, 2020 298 views Posted By : YarlSri TV
Image

அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பிரமாண்ட ஊர்வலம் வவுனியாவில்! 

இந்து மக்கள் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சனைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பிரமாண்ட ஊர்வலம் வவுனியாவில் ஆரம்பமாகியது.



இப்பேரணியானது இன்று காலை 8.30 மணியளவில் வவுனியா குருமன்காடு காளிகோயில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி குருமன்காட்டு சந்தி ஊடாக சென்று; அங்கிருந்து புகையிரத நிலைய வீதியின் ஊடாக நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம் சென்று; பஜார் வீதியூடாக சென்று சூசைப்பிள்ளையார்குளம் பகுதியூடாக வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலிலே இவ் ஊர்வலம் நிறைவடைந்தது.




  1. பசு வதையை எவ்வடிவிலும் தடுத்தல் அதனை அரசாங்கத்திற்கு சட்டமாக்க கோருதல்,

  2. மதமாற்றத்தை தடுத்தல் அதனை தடுக்க அரசாங்கத்தை சட்டமாக்க கோருதல்,

  3. இந்துமதம் சார்ந்த புராதன இடங்கள் எல்லாவற்றிலும் இந்துமதம் சார்ந்தவர்கள் எந்தவித தடையும் இன்றி வணக்கம் செய்வதற்கு வழிபாடு செய்வதற்கு ஆவன செய்தல்,

  4. ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிக்கல்விக்கு முக்கியம் கொடுத்து மற்றைய வகுப்புக்கள், நிகழ்வுகளை தடைசெய்து அறநெறியை வளர்த்தல்,

  5. வவுனியா மாவட்டத்திலே பல வீதிகளிற்கு, கிராமங்களிற்கு இந்து மதம் சார்ந்த பெயர்கள், காலக்கிரமத்தில் மாற்றப்படுகின்றது. வேறு மதம் சாரந்து, வேறு பெயர் சார்ந்து எங்களிற்கு எதுவிதத்திலும் தொடர்பில்லாத பெயர்கள் வருகின்றன. அவற்றையெல்லாம் நீக்கப்பட்டு இந்துமதம் மற்றும் எங்களுடைய தமிழ்மொழி சார்ந்த பழமைவாய்ந்த பெயர்கள் அப்படியே இருப்பதற்கு ஆவண செய்ய வேண்டும்,

  6. இந்து மத ஆலயங்கள், நெறிக்கழகங்கள், ஒன்றியங்கள் மன்றங்கள் எல்லோரும் தங்களுடைய அன்றாட கடைமைகளோடு சமுதாய வளர்ச்சிக்கு சமுதாய தொண்டினை கட்டாயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.



ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான இந்து மக்கள் கலந்து கொண்டதுடன் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகன ஊர்திபவனியும் இடம்பெற்றிருந்தது.



ஊர்வலத்தில் நல்லை ஆதினத்தின் இரண்டாம் குருமகாசந்நிதானம், அகில இலங்கை இந்துசாசனத்தின் தலைவர் ஐயப்பதாசக்குருக்குள், வேலர் சுவாமிகள் முத்து ஜெயந்தி நாதக்குருக்கள், பிரபாகரக்குருக்கள், தமிழருவி சிவகுமாரன், உட்பட நூற்றுக்ணக்கான இந்துமதக்குருக்கள், ஆலயத்தொண்டர்கள், வர்ததகர்கள், பொது அமைப்பினர் என பலர் கலந்துகொண்டனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

14 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

14 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

14 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

14 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

14 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

14 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை