Skip to main content

முப்படைகளுக்கு தேவையான புதிய ஆயுதக் கொள்கை அறிவிப்பு!

Sep 29, 2020 285 views Posted By : YarlSri TV
Image

முப்படைகளுக்கு தேவையான புதிய ஆயுதக் கொள்கை அறிவிப்பு! 

முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான, புதிய ஆயுதக் கொள்முதல் நடைமுறை கொள்கையை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.



முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் கொள்முதலில் உள்ள பல்வேறு நடைமுறை சிக்கல்களை நீக்கும் வகையில், புதிய ஆயுதக் கொள்முதல் நடைமுறையை, மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்; அவர் கூறியுள்ளதாவது:புதிய கொள்கையின்படி, ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிப்பில் உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற, முன்னுரிமை அளிக்கப்படுகிறது.



சுயசார்பு இந்தியா என்ற இலக்கை அடையும் வகையில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை முழுமையாக நம்பியிருக்காமல், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உட்பட பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் விரிவாக கூறப்பட்டுள்ளது.



அவசரகால தேவை மற்றும் அத்தியாவசிய பொருட்களை, தங்கள் பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து உடனடியாக வாங்குவதற்கு, முப்படைகளுக்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது.ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் உற்பத்தி துறையில், அன்னிய முதலீடுகள் அனுமதிக்கப்படும்.

அதே நேரத்தில் இவை, வெளிநாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்வதை குறைக்கும் வகையிலும், ஏற்றுமதி செய்யும் வகையிலும் செயல்பட அனுமதிக்கப்படும்.



உள்நாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், அன்னிய முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, ஆயுதக் கொள்முதல் கவுன்சிலின் கூட்டம், ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடந்தது. அதில், அமெரிக்காவிடம் இருந்து, 72 ஆயிரம், 'சிக் சாயர் ரைபிள்கள்' உட்பட, 2,290 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை