Skip to main content

29-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா?

Sep 25, 2020 238 views Posted By : YarlSri TV
Image

29-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா? 

கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.



அதன்பிறகு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.



8-வது கட்டமாக கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த கால கட்டத்தில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.



தமிழகம் முழுவதும் கோவில்கள் திறக்கப்பட்டன. மாவட்டங்கள் இடையே பஸ் போக்குவரத்தும் தொடங்கியது. இ-பாஸ் ரத்து செய்யப்பட்டது. பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்களும் திறக்கப்பட்டன. கடைகள் திறப்பு நேரமும் நீட்டிக்கப்பட்டது.



இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களி டம் ஆலோசனை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.



தற்போது மின்சார ரெயில் போக்குவரத்து, தனியார் பஸ் போக்குவரத்து மட்டுமே முழுமையாக இயங்காமல் உள்ளது.



இந்த நிலையில் 8-ம் கட்ட ஊரடங்கு வருகிற 30-ந்தேதி முடிவடைகிறது. வழக்கமாக ஊரடங்கு முடியும் நேரத்தில் அடுத்த கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பதாக, வேண்டாமா? என்பது பற்றியும், தளர்வுகளை அறிவிப்பது பற்றியும் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி அறிவிப்புகளை வெளியிடுவார்.



அந்த வகையில் வருகிற 29-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். முன்னதாக மாவட்ட கலெக்டர்களுடனும் அவர் ஆலோசனை நடத்துகிறார்.



அதன்பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது ஊரடங்கு முடிவுக்கு வருமா? என்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை