Skip to main content

ஆன்லைன் சிலம்ப போட்டி தங்கபதக்கங்களை குவித்த திருச்சி சிலம்பாட்ட வீரர்கள்!

Sep 23, 2020 283 views Posted By : YarlSri TV
Image

ஆன்லைன் சிலம்ப போட்டி தங்கபதக்கங்களை குவித்த திருச்சி சிலம்பாட்ட வீரர்கள்! 

கொரோனா தொற்றின் காரணமாக தொலைக்காட்சி விவாதங்கள் பலவும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. நீதிமன்ற விசாரணைகள் பலவும் காணொளி காட்சி மூலமாகவே நடந்துவருகின்றன. சிலம்ப போட்டியும் ஆன்லைன் மூலமாகவே நடந்திருப்பது ஆச்சரியப்படுத்துகிறது.



மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகள் கலந்துகொண்ட நிகழ்நிலை ஆன்லைன் சிலம்பப் போட்டியில் 246 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியை மலேசியாவின் சிலம்ப கோர்வைக் கழகம், சிங்கப்பூர் சிலம்ப கோர்வைக் கழகம் மற்றும் உலக இளைஞர் சிலம்ப சம்மேளனம் இணைந்து மலேசிய சிலம்ப மாஸ்டர் கலைமாமணி கு.அன்பழகன் தலைமையிலான குழுவினர் நடத்தினர். இதில் திருச்சி காவலர் மற்றும் சிலம்ப மாஸ்டர் அரவிந்தின் தலைமையிலான சிலம்ப வீரர்கள் பலர் ஆன்லைன் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டனர்.



இந்த ஆன்லைன் சிலம்ப போட்டியானது எந்த வித கட்டணமும் இன்றி மலேசிய சிலம்ப மாஸ்டர் கு.அன்பழகன் தலைமையிலான அணியினர் நடத்தினர் . முதல் முறையாக வெற்றி பெறும் ஆண்கள் பிரிவில் 15 பேர் மற்றும் பெண்கள் பிரிவில் 15 பேர் என அனைவருக்கும் வயது அடிப்படையில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழும் மேலும் அனைத்து சிலம்ப வீரர்களையும் ஊக்குவிக்கும் விதமாக ரொக்க பரிசு தொகையும் வழங்கினார்கள்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை