Skip to main content

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்!

Sep 23, 2020 254 views Posted By : YarlSri TV
Image

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்! 

திருவள்ளூர் அருகே தனியார் கல்லூரியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.



இதில் பேசிய சாமுண்டீஸ்வரி, ’’பெண்களும், குழந்தைகளும் விழிப்புடன் இருந்தால் குற்றங்கள் வெகுவாக குறைக்கப்படும். பெண் குழந்தைகளை நாம் விழிப்புடன் இருக்கச் சொல்லி தர வேண்டும். பாலியல் தொல்லை தரும் குற்றவாளிகளிடம் இருந்து நம் குழந்தைகளை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.



பாதுகாப்பற்ற தொடுதல் குறித்தும் புரிய வைக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் இருந்துபெண் குழந்தைகள் 3 வயது முதல் 18 வயது வரை உள்ள பெண் குழந்தைகளை தனியே விட்டு விட்டு செல்லும் போது துணைக்கு யாராவது விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். பத்து வயது முதல் 18 வயது வரை உள்ள ஆண் பெண் குழந்தைகளை குழந்தைகள் பயன்படுத்தும் செல்போன் அடிக்கடி சோதனை செய்ய வேண்டும்.



அதிகமான பெற்றோர் குழந்தைகளை தனியாக விடக்கூடாது வயது வந்த பிள்ளைகள் நண்பர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். கல்லூரி பள்ளி கல்லூரி அசல் சான்றிதழை பெற்றோர்கள் தங்கள் பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் போட்டோக்களை தவிர்க்க அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்’’ என்று கூறினார்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை