Skip to main content

நீட் தேர்வை நீக்கக்கோரி மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கடந்த 14ம் தேதியிலிருந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்!

Sep 19, 2020 262 views Posted By : YarlSri TV
Image

நீட் தேர்வை நீக்கக்கோரி மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கடந்த 14ம் தேதியிலிருந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்! 

நீட் தேர்வை நீக்கக்கோரி மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கடந்த 14ம் தேதியிலிருந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து தன் ஆதரவைத் தெரிவித்தார். மேலும் உடல்நலனை கருத்தில்கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு மாற்று வழியில் போராடுமாறு அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நாம் மருத்துவராக வேண்டிய 13 மாணவர்களை இழந்துள்ளோம். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெஇவித்து மக்கள் பாதை இயக்க நண்பர்கள் 6 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த வக்கற்ற அரசாக உள்ளது. திமுக சார்பில் போராட்டத்தை கைவிட கோரிக்கை வைத்துள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எங்களை கைது செய்தாலும் பரவாயில்லை என்று மக்கள் பாதை நண்பர்கள் கூறுகின்றனர்.



நுழைவுத் தேர்வை தமிழகத்தில் ஒழித்தது கலைஞர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. இபிஎஸ் ஓபிஎஸ் ஆட்சியில்தான் மீண்டும் நீட்தேர்வு தமிழகத்திற்கு வந்தது. அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியிருந்தனர். ஆனால் அதனை எதுவும் செய்யவில்லை. ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த வெற்றி நீட் தேர்வுக்கு கிடைக்காதது ஏன்? ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது நடந்தது எடப்பாடி முதல்வராக இருக்கும்பொழுது நடக்காதது ஏன்? கொரோனா விட மோசமான கொடுங்கோல் ஆட்சி அதிமுக ஆட்சி… ஆளுமைத் திறன் இல்லாததால் அடிமையாக ஆட்சியாக அதிமுக ஆட்சியை செயல்படுகிறது” எனக் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை