Skip to main content

சிலிண்டர் எடுத்துச் செல்ல தடை விதிக்கக்கூடாது மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Sep 14, 2020 234 views Posted By : YarlSri TV
Image

சிலிண்டர் எடுத்துச் செல்ல தடை விதிக்கக்கூடாது மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு 

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று மட்டுமே இந்தியாவில் 93,215 பேராக அதிகரித்துள்ளனர். இந்தியாவின் மொத்த பாதிப்பில் 60 சதவிகிதத்தை 5 மாநிலங்கள் மூலமே அடைந்திருக்கிறது.



மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மத்திய தொழில் வளர்ச்சித்துறை செயலாளர், மருந்து துறை செயலாளர், மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தொழில்துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.



இந்த மாநிலங்களில் மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்  மற்றும் இந்த மாநிலங்களுக்கு இடையே  ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்  தடையின்றி கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதுதான் இந்த கூட்டத்தின் நோக்கம். 



மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்,  மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட விஷயங்கள்: 



உற்பத்தி நிலையங்கள் வாரியாக / மருத்துவமனை வாரியாக ஆக்ஸிஜன் சிலிண்டர் மேலாண்மை மற்றும் சரியான நேரத்தில் நிரப்புவதற்கான முன்கூட்டியே திட்டமிடல் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும்.



மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இடையே மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டு செல்வதில், எந்த கட்டுப்பாடும் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். 



நகரங்களுக்குள் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் டேங்கர்ககளுக்கு ‘‘பசுமை வழித்தடம்’’ அமைத்து தர வேண்டும். 



ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள், உற்பத்தியாளர்களுடன் நீண்ட கால ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். எனவே, ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு செல்வதற்கு மாநிலங்கள் தடை விதிக்க கூடாது.  



ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் தடையற்ற சப்ளைக்கு, உற்பத்தியாளர்களுக்கு சரியான நேரத்தில் கட்டணத்தை செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 



ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளுக்கு, மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்தி தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.  

ஆக்ஸிஜன் நிரப்புவதற்காக சிலிண்டர்களை அனுப்பும்போது, அவைகள் நெறிமுறைப்படி முறையாக சுத்தப்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை