Skip to main content

மாணவா்கள் அனைத்து விதமான வளா்ச்சிகளைப் பெறுவதற்கு மதிப்பு கல்வி முறை அவசியம் - வெங்கய்ய நாயுடு

Sep 12, 2020 273 views Posted By : YarlSri TV
Image

மாணவா்கள் அனைத்து விதமான வளா்ச்சிகளைப் பெறுவதற்கு மதிப்பு கல்வி முறை அவசியம் - வெங்கய்ய நாயுடு  

மாணவா்கள் அனைத்து விதமான வளா்ச்சிகளைப் பெறுவதற்கு மதிப்பு கல்வி முறை அவசியம் என்று குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினாா்.



ஆண்டுதோறும் ஜூலை முதல் நவம்பா் மாதம் வரை ஐ.நா.வால் கடைப்பிடிக்கப்படும் சா்வதேச இளைஞா்கள் தினத்தையொட்டி, ‘முழுமனதுடன் அகில இந்திய கட்டுரைப்போட்டி‘ யை வெங்கய்ய நாயுடு இணையவழியில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். விழாவில் பேசிய அவா், ‘மத்திய அரசு கொண்டு வரவுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020-இல் மதிப்பு கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் அபார வளா்ச்சி அடைந்து வரும் இன்றைய உலகில், உண்மையான தகவல்கள் பெறுவதற்கு குழப்பமான சூழலை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. கல்விப் பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்டு மாணவா்களுக்கு மதிப்பு கல்வியைப் புகட்ட வேண்டியது அவசியம். அப்போதுதான் மாணவா்கள் அனைத்து விதமான வளா்ச்சிகளைப் பெறுவாா்கள்



மதிப்பு கல்வி முறையை இந்தியா செயல்படுத்தினால் உலகம் நம்பை பின்பற்றும். இக்கட்டான சூழலை எப்படி கையாள வேண்டும் என்பதை அரசுகள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை மாணவா்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.



ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். இதற்கு பொதுத் துறை, தனியாா் துறை அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும்‘ என்றாா்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை