Skip to main content

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்ற கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்!

Sep 11, 2020 236 views Posted By : YarlSri TV
Image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்ற கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்! 

பாராளுமன்ற கூட்டம் வருகிற 14-ந்தேதி தொடங்கி நடத்தப்படுகிறது. அக்டோபர் 1-ந்தேதி வரை கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.



கொரோனா பிரச்சனை காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு போதிய இடங்கள் இல்லாததால் இரு அவைகளும் ஷிப்ட் அடிப்படையில் தனித்தனியாக நடத்தப்படுகின்றன.



ஆனாலும் வயதான எம்.பி.க்கள், ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



குறிப்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார். அவர் கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். எனவே அவர் முதல் நாள் கூட்டத்தில் மட்டும் பங்கேற்று விட்டு மற்ற கூட்டங்களில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்துள்ளார்.



இதேபோல மம்தா கட்சியில் மூத்த எம்.பி.க்கள் சிசிர்அதிகாரி, சவுத்ரி மோகன் ஆகியோர்கள் பங்கேற்க மாட்டார்கள் என மம்தா அறிவித்துள்ளார்.



காங்கிரஸ் கட்சியில் ஏ.கே. அந்தோணிக்கு 79 வயது ஆகிறது. அவரும் பங்கேற்க மாட்டார். அதே போல வயலார் ரவிக்கு 83 வயது ஆகிறது. அவரும் பங்கேற்கவில்லை.



சோனியாகாந்தி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார். எனவே அவரும் பங்கேற்கவில்லை.



மேல்சபையில் உறுப்பினர்களின் சராசரி வயது 63 ஆக உள்ளது. எனவே பெரும்பாலான உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல மற்ற கட்சிகளிலும் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று தெரிகிறது.



ஆனால் மக்களவையில் சராசரி வயது 54 ஆக உள்ளது. எனவே அந்த கூட்டத்தில் அதிக உறுப்பினர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை