Skip to main content

குறைந்தது வெளிநாட்டு கையிருப்பு - ரூபாவின் பெறுமதியை நிலைநிறுத்துவதில் பெரும் சிக்கல்

May 01, 2022 84 views Posted By : YarlSri TV
Image

குறைந்தது வெளிநாட்டு கையிருப்பு - ரூபாவின் பெறுமதியை நிலைநிறுத்துவதில் பெரும் சிக்கல் 

நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதியை நிலைநிறுத்துவதற்கு கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





மார்ச் மாத இறுதியில், மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, ஆனால் சீன அந்நியச் செலாவணி வசதியின் மதிப்பு குறைக்கப்பட்டபோது, ​​மீதமுள்ள பயன்படுத்தக்கூடிய பண இருப்பு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.



ஏனைய அத்தியாவசிய இறக்குமதிகளை மேற்கொள்வதற்கு அவ்வப்போது டொலர்கள் விடுவிக்கப்படுவதால், அந்த கையிருப்புகளின் அளவு மேலும் குறைந்துள்ளது.





தற்போது இலங்கையில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பொருளாதார மற்றும் நிதி நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை