Skip to main content

பள்ளிகள் திறப்பு – மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்!

Sep 14, 2020 247 views Posted By : YarlSri TV
Image

பள்ளிகள் திறப்பு – மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்! 

வரும் 21ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.



இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து மத்திய அரசு பொதுமுடக்கத்தில் தளர்வு அளித்த நிலையில் வரும் 21 ஆம் தேதி முதல் பள்ளிகளை அந்தந்த மாநில கொரோனா சூழலை பொறுத்து திறந்து கொள்ள அனுமதியளித்தது.



இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்த வழிக்காட்டு நெறிமுறைகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், “வகுப்பறையில் மாணவர்கள் இடையே தனிநபர் இடைவெளியில் கடைப்பிடிக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி வகுப்புகளை சுத்தம் செய்ய வேண்டும்.



மாணவர்கள் மடிக்கணினி, நோட்டு புத்தகங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.



கதவுகள், நாற்காலிகள், கழிப்பறை மற்றும் மாடிப்படிகளின் கைப்பிடிகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்ல அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்.



ஆய்வகங்களில் நாற்காலிகள் மற்றும் மேசைகள் ஆறு அடி இடைவெளியுடன் இருத்தல் வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை