Skip to main content

5 மாதங்களுக்கு மேலாகியும் இன்றும் கொரோனா குறையாத ஒரே நாடு இந்தியா - ராமதாஸ்

Sep 09, 2020 224 views Posted By : YarlSri TV
Image

5 மாதங்களுக்கு மேலாகியும் இன்றும் கொரோனா குறையாத ஒரே நாடு இந்தியா - ராமதாஸ் 

கொரோனா தொற்று பரவத் தொடங்கி 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்றும் குறையத் தொடங்காத ஒரே நாடு இந்தியா தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் 43,00,000 பாதிப்புகளுடன் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது.



அதே போல், பலி எண்ணிக்கையும் 73 ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89,706 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43,70,128 ஆக உயர்ந்தது.

புதிதாக 1,115 பேர் இறந்துள்ளனர்.



இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 73,890 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 33,98,844 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,97,394 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.



இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'கொரோனா தினசரி பாதிப்புகள் அமெரிக்காவில்  28,561 ஆகவும், பிரேசிலில் 17,330 ஆகவும் குறைந்து விட்டது.



ஆனால், இந்தியாவில் 89,852 ஆக அதிகரித்து விட்டது. உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 2.47 லட்சம் தொற்றுகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்பட்டவை! கொரோனா தொற்று பரவத் தொடங்கி 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்றும் குறையத் தொடங்காத ஒரே நாடு இந்தியா தான்.



எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மக்கள் இதை கருத்தில் கொண்டு  மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்!' எனத் தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை