Skip to main content

யாழ்ப்பாணத்தில் குண்டு வீச்சு! பதற்றத்தில் மக்கள்

Apr 19, 2023 80 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணத்தில் குண்டு வீச்சு! பதற்றத்தில் மக்கள் 

யாழ். கஸ்தூரியார் வீதியில், யாழ். இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் கடையொன்றின் மீது அடையாளம் தெரியாத சிலர் நேற்றிரவு (18) வெடிகுண்டு ஒன்றினை வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த வெடிகுண்டு வாகன திருத்தகத்தில் தரித்துநின்ற கார் ஒன்றின் மீது வீழ்ந்து வெடித்ததால்  சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.



சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.



குறித்த வெடி குண்டு உள்நாட்டில் தயாரித்திருக்கலாம் எனவும், அது பாரியளவிலான சேதங்களை விளைவிக்க கூடியது அல்ல என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.



சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை