Skip to main content

இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் முதன்முதலாக துப்பாக்கிச் சண்டையால் பதற்றம்!

Sep 08, 2020 253 views Posted By : YarlSri TV
Image

இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் முதன்முதலாக துப்பாக்கிச் சண்டையால் பதற்றம்! 

இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் முதன்முதலாக துப்பாக்கிச் சண்டையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா - சீனா இடையே எல்லையில் கடந்த 3 மாதங்களாக பதற்றம் நிலவி வரும் நிலையில், நேற்று இரவு இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே முதன்முதலாக துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது.



பாங் கோங் த்சோ என்னும் பனி ஏரியின் தெற்கு பகுதி மற்றும் ஷென்பவோ மலையோரத்தில் இரு நாட்டு வீரர்களும் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



இந்த பதற்றமான சூழல் குறித்து சீன ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஷாங் ஷுலி கூறுகையில், ' இந்திய ராணுவத்தினரே எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து வந்து  பாங் கோங் த்சோ ஏரியின் தெற்கு பகுதி மற்றும் ஷென்பவோ மலைபகுதிக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட தொடங்கியதாக தெரிவித்தனர்.



சீன வீரர்கள் அவர்களின் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போது திடீரென தாக்கத் தொடங்கிவிட்டதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.



அத்துடன் நிலைமையை கட்டுப்படுத்த வேற வழியின்றி பதிலடி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் சீன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் செயல்,  மோசமான ஆத்திரமூட்டும் செயல்பாடு என விமர்சித்துள்ள சீன ராணுவம், இத்தகைய ஆபத்தான செயல்களை இந்திய ராணுவம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம் எனவும் கூறியுள்ளது.



சீன ராணுவத்தின் புகாருக்கு இந்திய தரப்பில் இதுவரை எந்த பதில் விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. மொத்தத்தில் எல்லைத் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் இரு நாட்டு வீரர்கள் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்தியா , சீனா இடையே 45 ஆண்டுகளாக எந்த துப்பாக்கி சண்டையும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை