Skip to main content

எல்லைப் பிரச்சினையில் இந்தியா - சீனா ஆகிய இருநாடுகளுக்கும் உதவ தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

Sep 05, 2020 274 views Posted By : YarlSri TV
Image

எல்லைப் பிரச்சினையில் இந்தியா - சீனா ஆகிய இருநாடுகளுக்கும் உதவ தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப்  

லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதனால், இந்தியா - சீனா இடையே கடந்த 1962- ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. 



இந்த நிலையில், இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிரம்ப் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், “ இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது.  சீனர்கள் எல்லைப் பிரச்சினையில் மிகவும் வலுவாக செல்கின்றனர். சீனா - இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினையில் உதவ தயாராக இருக்கிறோம். இருநாடுகளிடமும் இது பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம்” என்றார். 



இந்தியாவிடம் சீனா அத்துமீறலில் ஈடுபடுகிறதா? என டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது . இதற்கு பதிலளித்த டிரம்ப், இல்லை என்று நம்புகிறேன். ஆனால்,  ஆனால் அவர்கள் (சீனா) நிச்சயமாக அதற்கு போகிறார்கள். நிறைய பேர் புரிந்துகொள்வதை விட அவர்கள் மிகவும் வலுவாக செல்கிறார்கள்” என்றார். 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை