Skip to main content

நம் நாட்டின் விவகாரங்களில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது - ராகுல் காந்தி

Sep 02, 2020 240 views Posted By : YarlSri TV
Image

நம் நாட்டின் விவகாரங்களில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது - ராகுல் காந்தி 

இந்தியாவில் ‘வாட்ஸ் அப்’ மற்றும் ‘பேஸ்புக்’ ஆகிய சமூக ஊடகங்கள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.



இதுதொடர்பாக பா.ஜ.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் காங்கிரஸ் கட்சி இதுபற்றி பாராளுமன்ற விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.



இந்த நிலையில் நம் நாட்டின் விவகாரங்களில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கம் மீதான ‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ் அப்’பின் வெட்ககேடான தாக்குதலை சர்வதேச ஊடகங்கள் முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளன. ஒரு வெளிநாட்டு நிறுவனம் மட்டுமல்ல, நம் நாட்டின் விவகாரங்களில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது. குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை