Skip to main content

பற்றி எரிந்த வீடு – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் உடல்கருக்கி பரிதாபமாக உயிரிழப்பு!

Sep 04, 2020 284 views Posted By : YarlSri TV
Image

பற்றி எரிந்த வீடு – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் உடல்கருக்கி பரிதாபமாக உயிரிழப்பு! 

தமிழ்நாட்டின் சேலம் குரங்குச்சாவடி அருகே பெருமாள் மலை அடிவாரத்தில் நரசோதிப்பட்டி ராமசாமி நகரில் வசித்து வருபவர் அன்பழகன், மர அரவை மில் உரிமையாளர்.



இவருடைய மனைவி புஷ்பா (வயது 40). அன்பழகன் தனது தம்பி கார்த்தியின்(40) குடும்பத்துடன் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் மாடியில் இவர்களின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.



நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அவர்களின் வீட்டில் திடீரென தீப்பற்றி பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பற்றி வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது.



இதில் வீட்டில் கீழே உள்ள அறைகளில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களில் அன்பழகன் மட்டும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயன்றார். வீட்டில் தூங்கிய மற்ற 5 பேரும் தீயில் கருகி பலியானார்கள். அவர்கள் தீயில் கருகி அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும், அன்பழகனும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



தீயணைப்பு படை வீரர்களும் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.



பின்னர் தீயில் கருகி உயிரிழந்த அனைவரின் உடல்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

15 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

15 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

15 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை