Skip to main content

இலங்கையில் 20 நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு...!

Aug 22, 2023 39 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் 20 நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு...! 

நாட்டிற்கு ஆகஸ்ட்  மாதத்தின் முதல்  20 நாட்களில் 98,831 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக  சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.



ஆகஸ்ட் மாத்தில் 01 முதல் 20 வரையிலான காலப்பகுதியில், நாளாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை சராசரியாக 4,941 ஆக இருப்பதாக  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவு காட்டுகிறது.



இது நாட்டிற்கு ஆகஸ்ட் 21 ஆம் திகதிக்குள் 103,000 க்கும் அதிகமானவர்கள் வருகை தந்துள்ளார்கள் என்பதைக் காட்டுகின்றது.



ஆகஸ்ட் மாதத்தில் 149,075 சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டுள்ளது.



இந்த ஆண்டு இதுவரை எட்டு மாதங்களில் ஏழு மாதங்களில் 100,000 பேர் வருகையை கடந்த மைல்கல்லை ஆகஸ்ட் மாதத்தில்  இலங்கை எட்டியுள்ளது.



எனினும், மே மாதம் 83,390 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வருகை தந்துள்ளனர். 



இந்நிலையில், ஆகஸ்ட் 20 ஆம் திகதியுடன் முடிவடைந்த முதல் எட்டு மாதங்களில் ஒட்டுமொத்தமாக 866,744 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.



ஆகஸ்ட் மாதத்தில் முதல் வாரத்தில் (01-07) 35,775 பேரும், இரண்டாவது வாரத்தில் (08-14) 37,890 பேரும், மூன்றாவது வாரத்தின் ஆறு நாட்களில் 25,166 பேரும் வருகை தந்துள்ளனர்.



ஆகஸ்ட் மாதத்தில் மொத்த வருகையில் 20 சதவீதம் பேர் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளார்கள்.



அதாவது, 19,804 பேர் வருகையுடன் நாட்டிற்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின் தரவரிசையில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது.



இரண்டாம் இடத்திலுள்ள ஐக்கிய இராச்சியத்திலிருந்து 12 (12,188) சதவீதம் பேர் வருகை தந்துள்ளார்கள்.



அதேவேளை, மூன்றாவது இடத்தில் உள்ள சீனாவிலிருந்து 7 ( 6,964) சதவீதம் பேர் வருகை தந்துள்ளார்கள்.



தரவரிசையில் நான்காவது இடத்தில் ஜேர்மனியும் மற்றும் ஐந்தாம் இடத்தில் பிரான்ஸ் உள்ளது.



கொவிட் -19 தொற்றுநோய்க்குப் பின்னர் எல்லைகள் திறக்கப்பட்டதிலிருந்து இலங்கைக்கான மிகப்பெரிய சுற்றுலாப் பயணிகளின் வருகையை கொண்டிருந்த ரஷ்யா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை