திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக 2 பேர் தேர்வு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Aug 31, 2020 244 views Posted By : YarlSri TV
திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக 2 பேர் தேர்வு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை மேற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: திமுகவின் 14வது பொதுத் தேர்தலில் சென்னை மேற்கு மாவட்ட தேர்தலில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.கே.ஜெகதீசன் மறைவெய்தியதாலும், கு.க.செல்வம் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாலும், இவர்கள் வகித்து வந்த இடங்கள் நிரப்பப்பட வேண்டியிருந்தது.
அதன்படி, சென்னை மேற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, இப்பொறுப்புக்கு போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து ஆகஸ்ட் 29ம் தேதி (நேற்று முன்தினம்), ரூ.25000 வீதம் தலைமைக் கழகத்தில் அளித்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்” என தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த பொறுப்புகளுக்கு எம்.கே.மோகன், வி.என்.ராஜன் ஆகிய இருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதனால் அவர்களது மனு ஏற்கப்பட்டு சென்னை மேற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர்களாக எம்.கே.மோகன் எம்எல்ஏ மற்றும் வி.என்.ராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
15 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
15 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
15 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
15 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
15 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
15 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago