Skip to main content

13-ம்தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!!

Aug 26, 2020 258 views Posted By : YarlSri TV
Image

13-ம்தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!! 

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நீட் தேர்வை குறிப்பிட்ட நேரத்தில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.



குறிப்பாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.



தேர்வு எழுத ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.



ஆகஸ்ட் மாதத்திற்குப்பின் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து விடும். அதன்பின் தேர்வை நடத்தலாம் என மத்திய தேர்வு முகமை நினைத்திருந்தது. ஆனால் தற்போதுதான் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.



நவம்பர், டிசம்பர் மாதம் வரை இப்படித்தான் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதற்கிடையில் எப்படியாவது தேர்வு நடத்திட முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



இதற்கிடையே விண்ணப்பங்களை பெற்றிருந்த மத்திய தேர்வு முகமை இன்று ஹால்டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3,843 மையத்தில் தேர்வு நடைபெற இருக்கிறது.



மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா போன்ற மாநில முதல்வர்கள் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை