Skip to main content

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடரும்படி நான்கு மாநில முதல்வர்களுக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம்!

Aug 28, 2020 229 views Posted By : YarlSri TV
Image

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடரும்படி நான்கு மாநில முதல்வர்களுக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம்! 

நீட்' தேர்வுக்கு எதிராக வழக்கு தொடரும்படி, நான்கு மாநில முதல்வர்களுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தி.மு.க., தலைமை அறிக்கை:மாணவர்களின் நலன் கருதி, 'நீட்', ஜே.இ.இ., தேர்வுகளை ஒத்திவைக்க கோரி,



காங்கிரஸ் ஆளும், ஏழு மாநில முதல்வர்கள், உச்ச நீதிமன்றத்தை நாடுகின்றனர். அவர்களை போல, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ஒடிசா மாநில முதல்வர்களும், உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் எனக் கோரி, அம்மாநில முதல்வர்களுக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



ஸ்டாலின் அறிக்கை:அருந்ததியினர் சமுதாயத்திற்கு, 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம், மாநில அரசுக்கு உண்டு என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதியை நிலைநாட்டியுள்ள, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி.தி.மு.க.,வின் சமூக நீதிக் கொள்கைக்கும், கருணாநிதி மேற்கொண்ட முடிவுக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி என்பதால், இத்தீர்ப்பை இதயப்பூர்வமாக வரவேற்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.



முப்பெரும் விழாசெப்., 15ல், தி.மு.க., முப்பெரும் விழா, சென்னை, அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. அவ்விழாவில், ஈ.வெ.ரா., விருது - மா.மீனாட்சிசுந்தரம்; அண்ணா துரை விருது - அ.ராமசாமி; கருணாநிதி விருது - எஸ்.என்.எம்.உபயதுல்லா; பாவேந்தர் விருது - தமிழரசி; அன்பழகன் விருது - சுப.ராஜகோபால் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை