Skip to main content

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது!

Aug 27, 2020 248 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது! 

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே /81 கொட்டடி மீனாட்சிபுரம் கிராமத்தில்



டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவினரின் அறுவுறுத்தலில்  பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரின் பங்குபற்றுதலில் குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது



கடந்த காலங்களில் கொட்டடி பகுதியில் டெங்கினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதனால்  எதிர்வரும் மாதம் மழைக்காலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் டெங்கு தாக்கம் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதனலால்    டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று 



கொட்டடி கடற்கரையை அண்டிய பகுதி மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் டெங்கு நுளம்பு பெருகாதவகையில் கழிவகற்றும் செயற்பாடு  



 முன்னெடுக்கப்பட்டது 



மீனாட்சி புரத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ,அப்பகுதி இராணுவத்தினரின் பங்களிப்போடு யாழ்ப்பாண மாநகரசபை பிரதி முதல்வர் ஈசன் தலைமையிலான மாநகர சபையின் சுகாதார பிரிவு  உத்தியோகத்தர்களின் வழிகாட்டுதலில்   டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்பட்டது..


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை