Skip to main content

குணமடைந்து இருந்தாலும் மீண்டும் ஆபத்து - மருத்துவப் பேராசிரியர் எச்சரிக்கை!

Aug 21, 2020 258 views Posted By : YarlSri TV
Image

குணமடைந்து இருந்தாலும் மீண்டும் ஆபத்து - மருத்துவப் பேராசிரியர் எச்சரிக்கை! 

மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே அனைத்து பாதுகாப்பு ஆன்டிபாடிகளையும் இழந்திருக்கலாம் என இங்கிலாந்து அரசாங்கத்தின் மூத்த ஆலோசகர் எச்சரித்துள்ளார்.



இது குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் சர் ஜான் பெல் கூறியதாவது:-



கொரோனா வைரஸ் மீண்டும் தொற்றாமல் பாதுகாக்கக் கூடிய ஆன்டிபாடிகள் ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறையும் என்று சமீபத்திய ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளது.



அதாவது, இங்கிலாந்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருந்து போது பாதிக்கப்பட்டவர்கள் தற்போது மீண்டும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படக்கூடும்.



உடலில் ஆன்டிபாடிகளை உருவாக்குவதன் மூலம் செயல்படும் எதிர்கால தடுப்பூசிகள் சில மாதங்களுக்கு மட்டுமே பாதுகாப்பாக இருக்கக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.



இரண்டாவது அலை சாத்தியம், மக்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிய டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெறலாம் என்று பரிந்துரைத்தார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை