Skip to main content

கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகம்

Aug 25, 2020 311 views Posted By : YarlSri TV
Image

கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகம் 

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரை விட அதில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகம் ஆகும். இதைப்போல இறப்பு விகிதமும் 1.85 சதவீதமாக சரிந்து உள்ளது.



ஒருபுறம் மின்னல் வேகத்தில் கொரோனா பரவினாலும், மறுபுறம் அதில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது அரசுகளுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.



இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 57 ஆயிரத்து 469 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து38 ஆயிரத்து 35 ஆக உயர்ந்து உள்ளது.



நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்தை கடந்திருக்கும் நிலையில், மீண்டவர் எண்ணிக்கையும் 75.27 சதவீதமாக அதிகரித்து உள்ளது.



தற்போது 7 லட்சத்து 10 ஆயிரத்து 771 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 22.88 சதவீதம் ஆகும். இதன் மூலம், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தவர் எண்ணிக்கை 3 மடங்குக்கு மேல் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.



இதைப்போல கொரோனா இறப்பு விகிதமும் 2 சதவீதத்துக்கும் கீழே சரிந்து, 1.85 சதவீதமாக உள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 836 பேர் இறந்தனர். இது முந்தைய 2 நாட்களை ஒப்பிடும்போதுகுறைவாகும்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை