Skip to main content

பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியது வங்காளதேசம்!

Aug 23, 2020 284 views Posted By : YarlSri TV
Image

பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியது வங்காளதேசம்! 

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2.34 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 8.09 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்



வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.94 லட்சத்தைக் கடந்துள்ளது.



இந்நிலையில், வங்காளதேசத்தில் ஒரே நாளில் 1,973 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,94,598 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 34 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 1.79 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.



 



உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் 15-வது இடத்தில் உள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

14 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

14 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை