Skip to main content

ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் புதிய அறிவித்தல்!

Jan 15, 2024 36 views Posted By : YarlSri TV
Image

ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் புதிய அறிவித்தல்! 

வற் வரி மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்க முடியும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறியுள்ளார். 



நேர்காணல் ஒன்றின் போது நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், நமது நாட்டில் பணவீக்கம் 70 வீதம் ஆக இருந்தது. வற் வரி அதிகரிப்புடன், பணவீக்கம் 2 வீதம் ஆக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதற்கிடையில், தேவையான பொருளாதார கருவிகளைப் பயன்படுத்தி அதைக் கட்டுப்படுத்தும் நோக்கம் உள்ளது.



அரசின் வருமானம் 

மேலும், வற் வரியிலிருந்
து விலக்கு அளிக்கப்பட்ட 138 பொருட்களில் 94 பொருட்களுக்கு இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.



ஒரு தயாரிப்பு 15 வீதத்திலிருந்து 18 வீதம் வரை மட்டுமே செல்கிறது. உயர்த்தப்பட்ட வற் வரியை முறையாகப் பெற்றால் மட்டுமே, வரிக் குறைப்பைப் பரிசீலிக்க முடியும்.



அரசின் வருவாயை அதிகரிப்பதே இதன் நோக்கம். அந்த வருமானம் கிடைத்தால் தான் பொதுச் சேவைகளை நடத்த முடியும். அஸ்வெசும போன்ற சமூகநலப் பணிகளைச் செய்ய முடியும். உர மானியம், ஊனமுற்றோர் உதவித்தொகை, சிறுநீரக நோயாளர் உதவித்தொகை, மருத்துவமனை நலன்புரி, கல்வி, ஓய்வூதியம் போன்றவற்றை வழங்கலாம்.



மேலும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. உண்மையை உள்ளபடியே நாம் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை